2023 ஆம் வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் பற்றி ஒரு பெரிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகிறது.

ஏஐசிபிஐ வெளியிட்டுள்ள டேட்டாக்களின் படி நவம்பர் மாதத்திற்கு பிறகு டிசம்பரில் ஏஐசிபிஐ புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வீழ்ச்சியின் காரணமாக ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அகவிலைப்படி உயர்வு இருக்காது என சில தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம்  உயர்த்தப்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% இருந்தது.

தற்போது அகவிலைப்படியை 3% உயர்த்தினால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 41% ஆக அதிகரிக்கும். பொதுவாக ஒரு ஆண்டில் 2 முறை 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் திருத்தங்களை மேற்கொள்கிறது.