ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 12ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்று வரை காணப்படவில்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் திண்டாடி வரும் நிலை உள்ளது. நீர் வளத்தை காப்பது மற்றும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்தது தான். நாம் வாழும் பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பு, மீதமுள்ள 70% நீர்ப்பரப்பு தான். ஆனால் இன்று அந்த 30% வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அழைக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பதுதான் உண்மை. நாம் தினந்தினம் செய்யும் சிறிய வேலைகளில் அதாவது பல் துலக்குவது முதல் அனைத்திலும் நாம் நீரை சிக்கனப்படுத்த வேண்டும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையும் சிக்கனத்தையும் மனதில் வைத்து மனிதர்களாகிய நாம் செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகமாக வாழ்ந்திட முடியும் என்பதை நீங்களே சற்று நினைத்துப் பாருங்கள். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும்.