ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ஆம் தேதி உலக வானிலை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஜெனிவாவில் உள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டது தான் இந்த நாள்.

வானிலை அறிவு, புள்ளி விவரங்கள் மற்றும் வானிலையை சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது இந்த நாளில் நோக்கமாகும். உலக வானிலை அமைப்பு தலைமையகத்தில் அந்த நாள் தொடர்புடைய நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன. வானிலை தொடர்புடைய நடவடிக்கைகளில் வானிலை ஆய்வுகளின் பங்களிப்பை ஆதரிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகம் மார்ச் 23ஆம் தேதி வெளியிட்டது. வானிலையின் மாற்றம் மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையதாகும்.

வேளாண் துறை, சுற்றுலா,அடிப்படை வசதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூக பொருளாதார துறைகளில் இது செல்வாக்கு பெறுகிறது. தண்ணீர், உணவுப் பொருள்கள் மற்றும் எறியாற்றல் ஆகியவற்றுக்கு வானிலையின் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த ஆண்டு  உலக வானிலை நாளில் உலக வானிலை அமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் உலக வானிலை தொடர்ந்து வெப்பமாய் உள்ளது, மக்களின் நடவடிக்கைகள் மற்றும் உலகத்திற்கு வெப்பத்தை அதிகரிப்பதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.