தமிழ் சினிமாவால் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் கடந்த 1951 ஆம் வருடம் மார்ச் மாதம் 23ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை இராம மூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். 5-ஆம் வகுப்பு வரை படித்த செந்தில், தந்தை தூற்றிய காரணத்தால் தன் 12ம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார்.

அதன்பின் நாடகத்தில் சேர்ந்து தன் நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார் நடிகர் செந்தில். அதனை தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த 1983ம் வருடம் வெளியாகிய மலையூர் மம்பட்டியான் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சென்ற 1984-ம் வருடம் கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என 2 மகன்கள் இருக்கின்றனர்.

செந்திலும், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல்வேரறு நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரையிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் திரையில் ஒன்றாக பார்த்தால் சிரிப்பு வந்துவிடும். சுமார்  15 ஆண்டுகள் 2 பேரும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,