
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். என் கட்சியில் வேட்பாளராக கூட நின்று போட்டியிட்டார். அவர் ஒரு இன உணர்வு மிக்க தமிழர். அவரை எல்லாரும் சேர்ந்து பண்ணும் பொழுது மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்ப நான் வந்து இதுல ஒன்னும் கருத்து சொல்ல முடியாது. ஏனென்றால் அண்ணன் என்ன பேசினார் ? என்று நான் கேட்கவில்லை… எனக்கு தெரிந்து, அவரு யாரு மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசிருக்க மாட்டார்.
அவர் இயற்கையவே வேடிக்கையாக பேசுபவர்… நகைச்சுவையாக பேசுபவர்… அதனால் அந்த மாதிரி பேசி இருப்பார்…. அதை இவ்வளவு தூரம் எடுத்து விவாதிக்க வேண்டுமா ? என்று என்பதுதான் எங்களுக்கு தோணுகிறது. நடிகர் சங்கம் யார் பக்கம் இருப்பது கேட்டிருக்கிறது ? சக நடிகர்கள் படங்கள் வெளிவிடாமல் தடுத்து, திரையரங்கு கிடைக்க விடாமல் பண்ணும் போதெல்லாம் நடிகர் சங்கம் பேசி இருக்கா ? விஜய்க்கு பிரச்சனை வரும்பொழுது பேசியிருக்கா ? விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா ?
அவருக்கு ஒரு பிரச்சினை வரும் பொழுது ஏதாவது பேசி இருக்கா ? தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறதா ? கர்நாடகா போல…. ஆந்திரா போல… கேரளா போல…. கேரளாவில் அம்மான்னு ஒரு அமைப்பிருக்கிறது…. அது போல உறுதியாக இருக்கிறதா? வேண்டுமென்றால் பேசும்….. இவ்வளவு நாள் இயங்கியதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை என தெரிவித்தார்.