
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ்ல இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்… பிரஸ் மிகப்பெரிய சப்போர்ட் பண்ணாங்க. அதுல டவுட்டே இல்ல… பிரிண்ட் மீடியாவில் இருந்து… யூடுப் மீடியால இருந்து…. ட்ரெடிஷனல் மீடியாவில் இருந்து…. டிஜிட்டல் மீடியாவில் இருந்து எல்லாருமே எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்க…
பொய் வழக்குகளை போட்டு…. இப்படியா நீங்க டார்கெட் பண்ணுவீங்க ? இப்படி போடுவதால் நாங்கள் பின் வாங்கி ஓடி போறோமா ? என்னதான் பொய் வழக்கு போலீஸ் போட்டாலும்…. எங்க அட்வகேட் எவ்ளோ திறமையாக வாதாடி வெளியே கொண்டு வந்திருக்காங்க…டைசில கூட தீபாவளிக்கு வெளியே வராம இருக்குறதுக்கு பிளான் போடுறாங்க…
ஜெயில் உள்ளே அரசு என்ன வேலை செய்யணும் ? அவுங்க என்ன வேலை செஞ்சிட்டு இருக்காங்க… என் கூட பக்கத்துல படுத்து ஒரு தம்பி, போலீசால் மூட்டியில் சூட்டு புடிச்சவங்களோட என்னை உட்கார வைக்கிறீங்க… இதுக்கெல்லாம் நாங்க பயந்துருவோமா…. இதையெல்லாம் பிரஸ் கேள்வி கேட்கணும்… இதை விடவே கூடாது.. நானும் விட மாட்டேன் என தெரிவித்தார்.