தனிநபர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் கட்சி என்பது அனைவரையும் விடப் பெரியது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதனை ஒழுக்கத்துடன் ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ள அவர் ஒற்றுமை என்பதே ஒரு இயக்கத்திற்குப் மிகப்பெரிய பலம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரது இந்தப் பதிவு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அண்மைக் காலமாக திமுகவுடன் சில விவகாரங்களில் முரண்பட்டு வந்த மாணிக்கம் தாகூர் தற்போது இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை விமர்சித்து வந்த அவர் இப்போது திடீரெனப் பின்வாங்கி ஒற்றுமை குறித்துப் பேசுவது ஏன் என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் இருக்கவே அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா என்ற கோணத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
