பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும். இதற்கிடையில் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18 (நாளை) பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது ” நாளை (புதன்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் விடுமுறை கிடையாது எனவும் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது வெளியூர் வந்துள்ள பெற்றொரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.