தனியார் நிறுவனங்களில் அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் ஊழியர்களின் மனநல பாதிப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர மறுத்த ஊழியரை மேலதிகாரி மிரட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mohit pandey (@sum_mohitt)

இணையவழியில் நடைபெற்ற அந்த அலுவலகக் கூட்டத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் வர வேண்டும் என்றும் அதற்குத் தனியாக ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மேலதிகாரி வற்புறுத்துகிறார். இதற்கு அந்த ஊழியர் மறுப்பு தெரிவிக்கவே, நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பிற்கு ஊழியர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வேலையை விட்டு நின்றால் ஒட்டுமொத்த குழுவின் மீதும் சட்டப்படி வழக்குத் தொடரப்படும் என்றும் மேலதிகாரி மிரட்டல் விடுக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பான காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், இந்த வீடியோ உண்மைதானா அல்லது திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் இல்லை.