டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்யவில்லை.

அதோடு நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என சொல்லி ஆம் ஆத்மி போர்க் கொடி உயர்த்தியது. இதன் காரணமாக மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், ஆம் ஆத்மி, பாஜக இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு மேயரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில் கடந்த 17 ஆம் சுப்ரீம்கோர்ட்டு அளித்த உத்தரவை அடுத்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கு துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்தார். அந்த வகையில் டெல்லி குடிமை மையத்தில் நேற்று காலையில் மாநகராட்சி கூட்டமானது கூடி மேயர் தேர்தல் நடைபெற்றது.

அதன்பின் நேற்றிரவு நடந்த நிலைக் குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பாஜக கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடமால் போராட்டம் செய்தனர். இதன் காரணமாக ஆம் ஆத்மி, பாஜக இடையில் மோதல் ஏற்பட்டது. நேற்றிரவு சண்டைப்போட்ட அசதியில் அவைக்குள்ளேயே கவுன்சிலர்கள் சிலர் காலை நீட்டி படுத்தபடியும், மேஜையின் முன்புறம் சாய்ந்தபடியும் படுத்து உறங்கி இருக்கின்றனர்.

தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் பிரெஷ்ஷாக எழுந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர். இரண்டு கட்சி உறுப்பினர்களும் அவைக்கு உள்ளேயே சாப்பிட்டு, தூங்கி பின் மீண்டும் எழுந்து மோதிக்கொண்ட சம்பவம் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.