திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் தொடங்கி தங்கும் அறைகள் வரை ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வசதியின் வாயிலாக உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி பல தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்திற்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தரிசன டிக்கெட் முன் பதிவு இன்று(பிப்,.23) காலை 9 மணியளவில் துவங்கப்பட்டது. அதன்பின் வருகிற ஏப்ரல், மே மாதத்துக்கான திருமலை அங்கப்பிரதட்சணத்திற்கான டிக்கெட்டுகள் நாளை மதியம் 2 மணியளவில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்ரீவாரி மற்றும் திருமலை திருக்கோவில்களின் ஆன்லைன் தரிசனம், கல்யாண் உத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜிதா பிரம்மோத்சவம், சாஹாஸ்ரா தீபலங்காரா சேவா போன்றவற்றின் தரிசன டிக்கெட்டுகள் நாளை மாலை 4 மணிக்கு துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.