செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  நேத்தைக்கு புள்ளி வச்ச கூட்டணியில் ஒரு அங்கம் தானே மம்தா பனர்ஜி. அந்த புள்ளி வைத்த கூட்டணி தானே… I டாட் N டாட் D டாட் அப்படி தானே இருக்கு. அந்த புள்ளி வெச்ச கூட்டணியில் மம்தா பானர்ஜி ஒரு முக்கியமான அங்கம். என்ன சொல்லி இருக்காங்க நேத்து…  காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது.  நான் சொல்லல,

புள்ளி வச்ச கூட்டணியில் முக்கிய புள்ளி சொல்லி இருக்கிறது.  அதனால் அந்த சீட்டெல்லாம் யார் ஜெயிப்பாங்க ? அவங்க I.N.D.I  கூட்டணி ஜெயிக்காது. அப்ப யார் ஜெயிப்பாங்க ? பிஜேபி 400 பிளஸ். அதுல சந்தேகமே இல்ல…

நிதிஷ்குமார் மனம் திருந்திய மைந்தனாக வந்துள்ளார். லல்லு-வினுடைய ஆட்சியை முதன்முதலாக லல்லு ராஜ் , ஜங்கிள் ராஜ் என அறிவிச்சது நிதீஷ் குமார் அவர்கள் தான்.  நிதிஷ்குமார் இதுவரை  9 முறை  CM ஆகி இருக்காரு. அதுல பெரும்வாரியான  காலகட்டம் லல்லு பிரசாத் உடைய

ஜங்கிள் ராஜ்-க்கு எதிராக தான் அவர் அரசியல் நடத்தி இருக்காரு. இடையில கொஞ்சம் காலம் அவரோடு இருந்து பார்த்தார்.  தன்னுடைய அனுபவத்தின் காரணமாக இது ஜங்கிள் ராஜ் ஆக  தான் இருக்கு. அதனால நான் இங்கு இல்லை என்று முடிவு பண்ணி இருக்கார். மனம் திருந்திய காரணத்தால்  பாரதிய ஜனதா கட்சி அவரை ஏற்றுக் கொண்டுள்ளது என பேசினார்.