Poco X5 Pro 5ஜி மொபைல்போன் 3 பின்புற கேமரா அமைப்பு உடன் வருகிறது. இது 108 MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP செகண்டரி சென்சார் கொண்டிருக்கிறது. 16MP கேமரா வீடியோ அழைப்பு மற்றும் செல்பிக்கு கிடைக்கிறது.

இந்த போனில் 6.67 இன்ச் முழு HD பிளஸ் OLED டிஸ்ப்ளேயானது கிடைக்கும். இதன் திரையானது 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 900 nits உச்ச பிரகாசம் உள்ளிட்டவற்றை ஆதரிக்கிறது. அதோடு Poco X5 Pro 5ஜி போனில் சீரான கேமிங் மற்றும் தடையற்ற செயல்பாட்டிற்காக Snapdragon 778G சிப்செட் மற்றும் 8GB RAM, 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வாயிலாக இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13-ல் வேலை செய்கிறது.

Poco X5 Pro 5ஜி போனில் 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000 mAh பேட்டரியானது பொருத்தப்பட்டிருக்கிறது. சார்ஜ் செய்வதற்கு USB-C போர்ட் இருக்கிறது. இது தவிர்த்து ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் டூயல் சிம் ஆகிய அம்சங்கள் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 6ஜிபி+128ஜிபி சேமிப்பு மாறுபாடு வகைகளில் பிளிப்கார்டில் ரூ.22,999க்கு கிடைக்கும். அதே சமயத்தில் அதன் டாப்-மாடல் அதாவது 8gp + 256gp சேமிப்பக மாடல் ரூ.24,999க்கு வாங்கலாம். இதன் விலையில் ரூ.4000 தள்ளுபடியானது கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட்கார்டு வாயிலாக போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி 10% தள்ளுபடியும் வழங்குகிறது. அதோடு எக்ஸ்5 ப்ரோவில் ரூ.879 இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது.