2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர், ‘என்னிடம் 2000 நோட்டுகள் இல்லை. பெரும்பாலான மக்களிடமும் தற்போது 2000 நோட்டுகள் இல்லை. 2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை. இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு PM மோடி எடுக்கும் நல்ல முடிவு’ எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.