தமிழகத்தில் 14 வயது வரையில் அனைவருக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசு ஏற்கின்றது. அதன்படி நடப்பு ஆண்டில் எல்கேஜி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 18ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீருடை மற்றும் புத்தகங்களுக்காக 11,977 ரூபாய் கட்டணமாக செலுத்தக்கூடிய தனியார் பள்ளி உத்தரவை எதிர்த்த வழக்கில்இலவச கட்டாய கல்வி திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகக் கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.