இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோடை காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை இயக்கத்திற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு ரயில்கள் மூலம் 244 பயணங்கள் இயக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தாம்பரம் – நெல்லை, தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – வேளாங்கன்னி, திருவனந்தபுரம் – மங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. கோடை காலத்தில் விடுமுறை காரணாமாக பல லட்ச மக்கள் பயணம் செய்வதால் தெற்கு ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.