மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக உருவாகி வருகின்றது என தெரிவித்தார்.

பாரதிய ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலசாஹேபஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு, மக்களை பிளவுபடுத்துவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றும் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டம் பற்றி தற்போதைய அரசு சிந்திப்பதில்லை என்று ஆதித்யா தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.