மும்பையில் பிசினஸ் டுடே விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு சொத்துக்கும் பணத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. கிரிப்டோ கரென்சியின் விலை அதிகரிப்பது என்பது நம்பிக்கையை பொறுத்தது. எந்த அடிப்படையும் இன்றி ஒன்றின் விலை முழுமையாக ஏறுவதும் இறங்குவதும் கூட சூதாட்டம் தான். அப்படி பார்த்தால் கிரிப்டோ கரன்சியும் செய்யும் ஒரு சூதாட்டம் தான். கிரிப்ட்டோ கரன்சியில் சந்தை மதிப்பு என்பது ஒருவித யூகம் மட்டுமே.‌ இந்நிலையில் நம் நாட்டில் சூதாட்டத்தை தடை செய்வது போன்று கிரிப்டோ கரன்சியையும் சூதாட்டமாக நினைத்து தடை செய்ய வேண்டும்.

இல்லையெனில் அதற்கென தனி விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். நாட்டில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பது என்பது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுவது போன்றதாகும். கிரிப்டோ கரன்சி தலை தூக்கும் போது அது பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும். அதோடு பொருளாதாரத்தை டாலர் மையம் ஆக்குதலுக்கும் வழிவகுக்கும். க்ரிப்ட்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளால் நமக்கு பிரச்சனை இல்லை என்று கூறினார். மேலும் ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமே கிரிப்டோ கரன்சி என்று அழைக்கப்படும் நிலையில், உலகம் முழுவதும் எந்த சட்ட விதிகளும் இல்லாமல் டிஜிட்டல் முறையில் க்ரிப்டோ கரன்சி வர்த்தகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.