தூத்துக்குடியில் உள்ள அண்ணாநகர் 7-வது தெருவில் அருண்குமார் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அருண்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அருண்குமார், சுருளி என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மதன் (38), சுருளி ஆகிய இருவரும் ஆத்திரத்தில்  இரும்பு கம்பியினால் அருண்குமாரை தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்ததால், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். இதன் பின் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இது பற்றி தென்பாகம் போலீசார் மதன், சுருளி ஆகிய  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.