இந்தியாவின் காஸ்ட்லி நகரமான மும்பையில் கால் வைக்கவே பயப்படும் நிலையில், அங்கு மாதம் வெறும் 18,000 ரூபாயில் தான் வசிப்பதாக இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்ரேயா கான் என்ற அந்த கண்டென்ட் கிரியேட்டர், தனது ஒரு மாத செலவுப் பட்டியலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரேயாவின் அந்த ‘மிரட்டல்’ பட்ஜெட் பட்டியல்:
வீட்டு வாடகை (1RK): ₹11,500
மின்சார கட்டணம்: ₹300 – ₹400
மொபைல் ரீசார்ஜ்: ₹300
போக்குவரத்து (லோக்கல் ரயில் + ஆட்டோ): ₹500
மளிகை பொருட்கள்: ₹1,500 – ₹1,800
ஆன்லைன் ஷாப்பிங்: ₹2,000
இதர செலவுகள்: ₹1,000 என அவர் கொடுத்துள்ள கணக்கைப் பார்த்து மும்பைவாசிகள் மிரண்டு போயுள்ளனர்.
“மும்பையில் 1RK வீடே 25 ஆயிரத்திற்கு மேல் இருக்கும்போது, உங்களுக்கு மட்டும் எப்படி 11 ஆயிரத்தில் கிடைத்தது?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல், கோடை காலத்தில் ஏசி இல்லாமல் கூட 300 ரூபாய் கரண்ட் பில் வருவது சாத்தியமில்லை என்றும், இது மும்பையின் பிரதான பகுதியாக இருக்க வாய்ப்பில்லை, தானே அல்லது பால்கர் போன்ற தூரத்து ஊர்களாக இருக்கலாம் என்றும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
எது எப்படியோ, பணவீக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில், 18 ஆயிரத்தில் பட்ஜெட் போட்டு வாழும் ஸ்ரேயாவின் திறமையை ஒருபுறம் பாராட்டி வந்தாலும், அதன் நம்பகத்தன்மை குறித்து இணையத்தில் பெரும் போரே நடந்து வருகிறது.
