இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல். ராகுல், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் (IND vs SA 3rd ODI) டாஸ் வென்றுள்ளார்.

இந்திய அணி தொடர்ச்சியாக 20 ஒருநாள் போட்டிகளில் டாஸ்ஸை இழந்தப் பிறகு, இப்போது வெற்றி பெற்றிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில்ப் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக வலது கை ஆட்டக்காரரான கே.எல். ராகுல், தொடர்ந்து தோல்வி அடைந்ததால், இந்த முறைத் தனது இடது கையால் நாணயத்தைச் சுண்டி டாஸ் வென்றார்.

வெற்றியைக் கேள்விப்பட்டவுடன் அவர் உற்சாகத்துடன் கையை உயர்த்திக் கொண்டாடியது, அருகில் இருந்த தென் ஆப்பிரிக்கக் கேப்டன் பவுமாவை (Bavuma)ச் சிரிக்க வைத்தது.

இந்தியப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோரி மார்கலிடம் (Morne Morkel), தனது உத்தியை விளக்கிய ராகுலின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.