இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தக் கடைசிப் போட்டியில் டாஸ் வென்றதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து 20 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

“>

20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் கே.எல். ராகுல் சிரித்த முகத்துடன் அதனை வெளிப்படுத்தினார். இதைப்பார்த்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா சிரித்துக்கொண்டே நின்றார்.

“>

மேலும், மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷித் ரானா துள்ளிக் குதித்துக் கொண்டாடியதும், அருகில் இருந்த ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் மோர்கல் உள்ளிட்டோர் சிரித்தப்படி உற்சாகம் அடைந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, கிரிக்கெட் புள்ளிவிவரங்களில் இது ‘மில்லியனில் ஒரு வாய்ப்பு’ என்ற அளவில் பேசப்படும் ஒரு நிகழ்வாகும்.