BPCL நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் நடையை கருத்தில் கொண்டு புதிய வசதியை தொடங்கி இருக்கிறது. இதற்கு pure for sure என்று பெயரிட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் திருப்தி அதிகரிப்பதை இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரில் டேம்பர் புரூப் சீல் இருக்கும். அதில் qr கோடு தெரியும். இதன் மூலமாக உத்தரவாதம் அளிக்கப்படும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் பொழுது வாடிக்கையாளர்கள் சிக்னேச்சர் டியூன்னோடு கூடிய பிரத்தியேகமான pure for sure பாப் அப்பை பார்க்க முடியும்.

எடுத்துக்காட்டாக சிலிண்டர் நிரப்பும் பொழுது  எடை, முத்திரை, QR குறியீடு இருந்ததா இல்லையா? என்பது போன்றவை அதில் இருக்கும். டெலிவரி ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக வெளிப்படுத்த தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிலிண்டர்களை அங்கீகரிக்க இது உதவுகிறது. சேதம் இருந்தால் qr குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாது. இதனால் டெலிவரி நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.