அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தன்னை விட 38 வயது மூத்தவரான 60 வயது நபரைத் திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரைட்டன் என்ற அந்த இளம்பெண், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவர் பணத்திற்காகவே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதாகப் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.
குறிப்பாக, அவரைப் பணத்தாசை பிடித்தவர் என்று சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாகச் சாடி வந்தனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள பிரைட்டன், தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலிப்பதாகவும், வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதாகவும், மற்றவர்களின் எதிர்மறையான கருத்துகளைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பணத்திற்காகத் திருமணம் செய்ததாகக் கூறுவது முற்றிலும் தவறு என்றும், தங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பார்த்துப் பொறுக்க முடியாதவர்களே இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
