தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது நடிகை ஷிவானி வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை ஷிவானி மற்றும் பாலாஜி காதலித்தனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது நடிகை ஷிவானியின் பிறந்தநாள் பார்ட்டியில் பாலாஜி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் சிவானி மற்றும் பாலாஜி காதலிக்க தொடங்கி விட்டார்களா என கேட்டு வருகிறார்கள்.