
பஞ்சாப் மாநிலத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் ஹர்பிந்தர் சிங். இவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ஹர்பிந்தர் ரூபாய் 500க்கு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.
இதில் ரூபாய் 10 கோடி பரிசுத்தொகை அமைந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியில் ஹர்பிந்தர் தனக்கு முதல் முறையாக அதிர்ஷ்டம் அடித்துள்ளது என கூறியுள்ளார். மேலும் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்த தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க இந்த பணத்தை பயன்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.