
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணியில் தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி ஆட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எனவே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆகவும், ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரி ஆகவும் பதவியேற்றார். இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் லோகேஷ் க்கு துணை முதல்வர் மந்திரி பதவி வழங்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மந்திரி எம்.எல்.ஏ சோமி ரெட்டி, சந்திரமோகன் ரெட்டி மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லோகேஷ் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களை குறித்து விவரித்து வந்தார்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்த்து இருக்கிறார். எனவே லோகேஷ் துணை முதல்வர் மந்திரி பதவிக்கு முழு தகுதியும் பெற்றவர் எனவும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் தற்போது முதல் மந்திரி ஆக பவன் கல்யாண் பதவியில் இருப்பதால் லோகேஷ்க்கு துணை மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் இடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.