நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதை கட்ட இன்னும் சில ஆண்டுகள் ஆகும். திமுக அரசு தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை, தேவையில்லாதவைகளுக்கு வாரி வழங்கி வருகிறது. நான் தமிழகத்திற்கு வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக தான். 3 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார்கள் என்றால், 60 ஆயிரம், 70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக கண்டிக்கின்றோம். தமிழகத்தில் திராவிட அரசியல் தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார். சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது? திமுக 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. இது 6-து முறை, இன்றைக்கும் பட்டியல் சமுதாய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திமுக பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளது என்று கூறினார்.