2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஒபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓபி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி சார்பாக தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றதில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டு, மற்றும் பணம் கொடுத்துவிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். எனவே இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பி ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உய்ரநீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,  தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையின் போது தேர்தல் அதிகாரி,  ஓ.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், முதல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அதில் திருத்தங்களை செய்து,  அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதுலயே சட்டவிரதம் இருக்கிறது. அதிகார துஷ்பரோகம் இருக்கிறது.  இதுமட்டும் இல்லாமல் பணம் கொடுத்து தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறார் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பில் விவாதங்களும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார். தற்போது நீதிபதி எஸ்.எஸ்  சுந்தர் பிறப்பித்த தீர்ப்பில்,  இந்த தேர்தல் மனு என்பது ஏற்கப்படுகின்றது. தேனியில்  தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் எம்பி யாக ரவீந்திரநாத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ளதாக தீர்ப்பாக முடிவாக இருக்கிறது. இதனால் எம்பி பதவியை ஓ. பி ரவீந்திரநாத் இழக்கின்றார்.