திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்….. நம்முடைய தலைவர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்…..  யாருடைய காலை பிடித்தும்  முதலமைச்சர் ஆக வில்லை  அதை நீங்கள் உணர வேண்டும். இப்படி படிப்படியாக உழைத்து முன்னேறியவர்தான் நம்முடைய தலைவர் அவர்கள்… இளைஞர் அணியில் 9 பேர்  மாநில துணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்…. பொறுப்பு உயர்வு…. பதவி உயர்வு கிடையாது….

தலைவர் எப்பொழுதுமே சொல்லுவர். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது  பொறுப்பு. பொறுப்போடு செயல்பட வேண்டும் என்று சொல்லுவார். 9  பேர் மாநில துணை செயலாளர்களாக பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த 9 பேரில் எட்டு பேர் ஏற்கனவே மாவட்ட அமைப்பாளராக…. துணை அமைப்பாளராக…. இளைஞர் அணியில் சிறப்பாக செயல்பட்ட காரணமாக தான் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நடைபெற்ற மாவட்டம் –  மாநகர – துணை அமைப்பாளர் நேர்காணலில் தமிழ்நாடு முழுவதும் நானும்,  நம்முடைய துணைச் செயலாளர் அத்தனை பேரும் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து… நேர்காணல்  செய்தோம்… அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்… அமைப்பாளர்…. மாநகர அமைப்பாளர்…. துணை அமைப்பாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் 658 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்…. அதிலே 452 பேர் ஏற்கனவே இளைஞரணியில் ஒன்றிய  –  நகர – பேரூர்  கழகத்தில் சிறப்பாக செயலாற்ற்றியதன்  காரணமாகத்தான் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டது.. உழைத்தால், யாரும் முன்னேறலாம்….  திமுகவில் உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இந்த மேடையே ஒரு சாட்சி.

மண்டலத்தின் பொறுப்பாளர் சகோதரர் சீனிவாசன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்..  மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து,  இன்றைக்கு மாநில துணைச் செயலாளராக பொறுப்பு உயர்வு  கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த பகுதியைச் சேர்ந்த மாநில துணைச் செயலாளர் சகோதரர் ஆனந்தகுமார், இங்கே மாவட்ட துணை அமைப்பாளராக… நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிய காரணத்தினால்,  நம்முடைய தலைவர் அவர்களால் கைகாட்டப்பட்டு இன்றைக்கு மாநிலத் துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார் என தெரிவித்தார்.