சமூக ஊடக உலகில், குழந்தைகள் மற்றும் விலங்குகளின் பாசத்தைக் காட்டும் காணொலிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு சிறுமி கன்றுக்குட்டி எருமைக்குத் பல் துலக்கும் காணொலி இணையத்தில் பரவி வருகிறது. தீபக் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த காணொலியில், ஒரு சிறுமி கன்றுக்குட்டி எருமையின் வாயைத் திறந்து, ஒரு நிபுணரைப் போல பிரஷ்ஷை வைத்துப் பல் துலக்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Deepak Kumar (@official_deepak_kumar_2581)

பொதுவாக, விலங்குகள் தங்கள் வாயருகே யாரையும் நெருங்க விடாத நிலையில், இந்தக் கன்றுக்குட்டி எருமை மிக அமைதியாக நிற்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தச் செயலை அந்தச் சிறுமி கட்டாயத்திற்காகச் செய்யாமல், மகிழ்ச்சியுடன் செய்வதை அவரது முகம் வெளிப்படுத்துகிறது.

இந்தக் காணொலியை இதுவரை ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். விலங்குகளின் மீதுள்ள சிறுமியின் பாசத்தையும், அச்சமற்ற செயலையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், “உலகின் அழகான பல் மருத்துவமனை இதுதான்” என்று வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்னொருவர், “இந்தக் காணொலியைக் காணும் போது என் குழந்தைப்பருவம் நினைவுக்கு வருகிறது” என்று தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.