லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

முன்னதாக லியோ படத்தின் டைட்டில் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. முழுவதும் ஆங்கில வரிகளை கொண்டு அமைந்திருந்த இப்படத்தின் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் பாடலை அனிருத் முன்னிலையில் சிறுவன் ஒருவர் பாடி அசத்தியுள்ளார்.

இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருக்கும் அனிருத், அங்கிருந்த ரசிகர்களுடன் உரையாடி போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது சிறுவன் ஒருவர் லியோ படத்தில் பாடலை பாடினார். அதை ரசித்து கேட்ட அனிருத் உடனடியாக தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அச்சிறுவனுக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உடனே  அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.