சொந்தமாக எலக்ட்ரிக் கார் வச்சிருக்காங்க, பெரும்பாலும் வீட்டிலேயே சமைச்சுத்தான் சாப்பிடுறாங்க, அப்படியிருந்தும் ஒரு மாசத்துக்கு 2.2 லட்ச ரூபாய் செலவாகுது என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள மாதந்திர செலவுக் கணக்கு நெட்டிசன்களின் தலையைச் சுற்ற வைத்துள்ளது.
அந்தப் பெண் வெளியிட்டுள்ள பட்டியலில் கட்டுமானத்தில் உள்ள வீட்டுக்கான இஎம்ஐ (EMI) மட்டும் 1.1 லட்ச ரூபாய் என்றும், தற்போதைய வீட்டு வாடகை 28,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர மளிகைக்கு 20,000 ரூபாய், குழந்தைக்கு டே கேர் செலவு 30,000 ரூபாய், அவுட்டிங் மற்றும் பொழுதுபோக்குக்கு 15,000 ரூபாய், ஷாப்பிங்கிற்கு 10,000 ரூபாய், கரண்ட் பில் 6,000 ரூபாய், ஆன்லைன் உணவு ஆர்டர்கள் 3,000 ரூபாய், வீட்டு உதவியாளருக்கு 1,800 ரூபாய் மற்றும் இன்டர்நெட்டிற்கு 500 ரூபாய் என மொத்தம் ஒரு மாதத்திற்கு 2,24,300 ரூபாய் கரையும் கணக்கை அவர் அப்படியே புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
இந்த நடுத்தர குடும்பத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டைப் பார்த்த நுகர்வோர்கள் மற்றும் நெட்டிசன்கள், “இந்தக் குடும்பம் எந்தச் செலவைக் குறைக்கணும்? நீங்களாவது கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்களேன்” என இணையத்தில் விவாதங்களை ஆரம்பித்து கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
