லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் பங்கேற்றபோது இத்திரைப்படம் பற்றிய அப்டேட் வழங்குமாறு கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், லியோ படத்தின் சூட்டிங் அடுத்த 60 நாட்களில் முடிவடைந்து விடும். இது மிகச் சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என லோகேஷ் தெரிவித்தார். இப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.