தெலுங்கு சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் கிருஷ்ணா. சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய கிருஷ்ணா கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாரத் பந்த் என்ற தெலுங்கு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா  உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மேலும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.