புண்ணிய பூமியான வாரணாசியின் படித்துறைகளில் தினந்தோறும் ஏகப்பட்ட சுவாரசியங்கள் நடக்கும். ஆனால், சமீபத்தில் அங்கு சிவபெருமான் வேடமிட்ட இரண்டு சிறுவர்கள் செய்த காரியம் சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
சிவனடியார் போல வேடமிட்டு படித்துறையில் அமர்ந்திருந்த அந்த இரு சிறுவர்களும், திடீரென ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மல்லுக்கட்டத் தொடங்கினர்.
बनारस में दो महादेव आपस में भीड़ गए 😂
बड़े महादेव ने छोटे महादेव के 60 रुपए लिए थे लेकिन अभी तक लौटाए नहीं🥲 pic.twitter.com/z1W8HXaw5q
— Nitin Prajapati (@Prajapat204) February 15, 2026
இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ஓடி வந்து சமாதானம் செய்ய முயன்றபோதுதான் அசல் காரணமே தெரியவந்தது. அந்தச் சிறுவர்களில் ஒருவர் மற்றொருவருக்கு 60 ரூபாய் கடன் கொடுத்தாராம், அதை அவர் திருப்பித் தராததால் ஏற்பட்ட வாக்குவாதமே பெரிய சண்டையாக மாறியுள்ளது.
“அவன் சின்னப் பையன் விட்டுடு” என்று சமாதானம் சொன்னால், “நாங்க எவ்வளவோ பொறுமையா இருந்தோம், ஆனா இவன் என் தலையிலேயே ஏறுறான்” என அச்சு அசல் வாரணாசி பாஷையில் அந்தச் சிறுவன் கொடுத்த பதிலடி இன்னும் ரகளையாக இருந்தது.
பணத்தை தான் தருவதாக அந்த நபர் சொல்லியும் கேட்காமல், ‘சிவபெருமான்கள்’ இருவரும் ஒருவரையொருவர் குஸ்தி போட்டுக்கொண்ட அந்த வீடியோ தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
