ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்குரிய அறிகுறி உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் போன்ற இடங்களில் தங்கப்படிவுகள் உள்ளதாக  ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கும் மேல் அந்த 3 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் தெரிவந்துள்ளது. ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கப்படிமங்கள் தொடர்பான ஆய்வுகளானது 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.