
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஒரு தோழமைக் கட்சி… ஒரு கூட்டணி கட்சி அதை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் ? நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
பல தடவை எச்சரிக்கை கொடுத்தோம். பலமுறை சொல்லிவிட்டோம். பேச்சை இதோடு நிறுத்து. இல்லன்னா எங்க ஆளுங்களும் கிளம்பி வந்தார்கள் என்றால் ? தாங்க மாட்டீங்க.. எங்க ஆளுங்க விட மாட்டாங்க. இனிமே அண்ணாமலையை தாறுமாறாக எங்க ஐடிவிங், எல்லா விங்கும் கடுமையாக விமர்சனம் பண்ணுவான்.
ஒரு கருத்து சொன்னீங்கன்னா… ஓராயிரம் கருத்து அண்ணாமலையை பற்றி வரும். அண்ணாமலையை சிறுமை புத்தி பற்றி எங்களுடைய தலைவர்கள் விமர்சனம் செய்வார்கள் என தெரிவித்தார்.