ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அந்த அடிப்படையில் அண்ணாமலையை திருத்துங்க. இவர் எங்களை பேச விடாம  வையுங்க. இப்ப கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு இந்த மாதிரி பேசினால் தொண்டர்கள் எப்படி  வேலை செய்வாங்க ?  எலக்சன்ல கூட்டணியில் இருக்கிற சூழ்நிலையில் இவர் இப்படி பேசிட்டு போனார் என்றால் ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் எப்படி ரசிப்பான் என பலமுறை சொல்லியாச்சு.

அண்ணா திமுகவோட கூட்டணி வைக்க வேண்டும் என்று  பிஜேபி தொண்டர்கள் விரும்புகிறார்கள். அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலை விரும்பாமல் இருக்கும் சூழ்நிலையில் அதிமுக – பிஜேபி கூட்டணியில் இல்லை.  உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கு ? உங்களுக்கு காலே கிடையாது.

பிஜேபி என்றும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை தான் இருக்கு. உங்களுடைய ஓட்டு வங்கி என்ன என்பது தெரியும். எங்கள வச்சு தான்  உங்க  அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் உங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறாங்க என தெரிவித்தார்.