செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசுவது குறித்து பலமுறை மேலே சொல்லியாச்சு. இவரை  இப்படி கட்டுப்படுத்தி வைங்க. ஒரு கூட்டணியிலிருந்து இருந்து கொண்டு இப்படி பேசுறது தப்பு.கள அளவில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் – பிஜேபி தொண்டர்கள் எப்படி  ஒற்றுமையாக வேலை செய்ய முடியும். அதனால கண்டித்து வைங்க என திரும்பத் திரும்ப சொல்லியும். அண்ணாமலை தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றார்.

இந்த மாதிரி பேசினா இனியும் பொறுக்குற மாதிரி இல்ல. அதனால  கூட்டணியை பொருத்தவரை   பிஜேபி – அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லை. தேர்தல் வரும் போது தான் , கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு கூட்டணி  இல்லை இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இதுதான் எங்களுடைய ஸ்டாண்டு.

இனிமே அண்ணாமலைக்கு எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் ? கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். அவரைப் பற்றி ஒரு புகழ் பாடுவதுதான் அவருடைய வேலையா இருக்கே ஒழிய,  அவர் சார்ந்த கட்சியை வளர்க்கணும் என்கிறது அவர் வேலை கிடையாது. கட்சியினுடைய முடிவை பொருத்தவரை இப்போதைக்கு கூட்டணி கிடையாது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றதும் தொண்டர்கள் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார் அண்ணாமலை. அண்ணாவை விமர்சனம் பண்ணுவது, பெரியாரை விமர்சனம் பண்ணுவது,  கழகப் பொதுச் செயலாளரை  விமர்சனம் பண்ணுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? எந்த தன்மான தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ் தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.