தலைவருக்கான தகுதி அண்ணாமலைக்கு இல்லை; ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி என்பது குறித்து தேர்தல் வரும் போது தான் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு பாஜகவோடு கூட்டணி இல்லை. அண்ணாமலை விமர்சனம் செய்து குறித்து மேலிடத்தில் சொல்லி இருக்கின்றோம். கள  அளவில் தொண்டர்கள் அனைவரும் உணர்ச்சியாக இருக்கிறார்கள். இந்த மாதிரி விமர்சனங்களை எல்லாம் பேசுவது  ஏற்றுக் கொள்ள முடியாது என மேலிடத்தில் சொல்லி விட்டோம். கழகப் பொதுச் செயலாளர் பொய் சொல்லி உள்ளார், நாங்களும் சொல்லி இருக்கின்றோம்.

மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில்…  முன்னாடி எவ்ளோ தலைவர் இருந்தார்கள்,   ஏதும் பிரச்சனை இல்லை. இல. கணேசன் இருந்தார் ஏதும் பிரச்சனை இல்லை. தமிழிசை இருக்கும் போது பிரச்சனை  இல்லை. இவரு வந்ததுல இருந்து அவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான்  இந்த மாதிரி தேவையில்லாத விமர்சனங்களை பேசுகின்றார்.

ஆதி காலத்துல நடந்த  விமர்சனத்தை தோண்டி தோண்டி எடுத்துப் பேசுகிறார். இவர் என்ன ஆதிகாலத்து டிபார்ட்மெண்ட்டா ? இவரு Archaeology Departmentல இருக்க வேண்டிய ஆளு. அப்படிப்பட்ட நபர் இன்னைக்கு மாநில கட்சியின் தலைவராக  தகுதி இல்லாத ஒருவர். தலைவருக்கான தகுதி தெரியணும். நாலு பேர் சேர்ந்து கோஷம் போட்டா தலைகனம் வந்துருது. எனவே  இன்னைக்கு இந்த மாதிரி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வருது. அதனால எங்களை பொறுத்தவரை கூட்டணி பொருத்தவரை இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply