மணல்குவாரி பற்றி சொன்னீங்க… நீங்களும் கனிம வளத்துறை அமைச்சரா இருந்து இருக்கீங்க… யார் எல்லாம் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்களோ, அவர்கள் மீதெல்லாம் ED நடவடிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,

தாராளமாக பண்ணட்டும்...  இவங்களைப் போன்று பயந்து…. நடுங்கி…. ஒடுங்கி கொண்டிருப்பவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கிடையாது… நான் எப்போதும்  தயாராக இருக்கிறேன்.  எப்பொழுது வேண்டுமானாலும்…. எந்த நேரத்தில் வேண்டுமானாலும்…..  விசாரணைக்கு வாங்க,  என்னை கூப்பிடுங்கள்…  நான் எங்கு வேண்டுமானாலும் வர தயாராக இருக்கிறேன.

இந்த பேடித்தனமாக… அஞ்சு நடுங்குகின்ற ஆள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது, நாங்களும் கிடையாது.  இந்த அரசு எந்த அளவிற்கு பயந்து இருக்கிறது… நடுங்கிக் கொண்டிருக்கிறது…. அச்சப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

மத்திய அரசின் அமைப்பு ED  ஆகட்டும்…. CBI ஆகட்டும்… எந்த அமைப்பாக இருந்தாலும்… உங்களை விசாரணை அழைத்தால்,  ஏதாவது ஆவணங்களை கொண்டு வரச் சொன்னால்….  நீங்கள் எங்களுடைய மேல் அதிகாரிகளின் அனுமதி பெறாமல்,  நீங்கள் செல்லக்கூடாது….. ஆவணங்களை சமர்ப்பிக்க கூடாது என்று தமிழக தலைமை செயலாளர் ஏன் அதிகாரிகளுக்கு அந்த உத்தரவை போட வேண்டும். மடியிலே கனமில்லை என்றால் உனக்கு எதற்கு பயம் என தெரிவித்தார்.