மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும், சொன்னீங்களா ? இல்லையா?  மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் இதற்கு பதில் சொல்லு உதயநிதி ஸ்டாலின் அவர்களே..

மாணவர்களை ஏமாற்றாதே ஸ்டாலின் அவர்களே… மாணவர்களை ஏமாற்றாதே….  நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. அதை தடுத்து நிறுத்த போராடியது அண்ணா திமுக. இதை மறைத்து,  இன்றைக்கு மக்களிடத்திலே மிகப்பெரிய அதிருப்தி திமுக அரசு மீது, வேற வழி இல்ல. ஏதேதோ சொல்லி நாடகமாடி இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறாங்க. இவர்களே கொண்டு வந்து,  இவர்களே  ரத்து செய்வதற்கு நாடாகமாடுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான்.

அதோடு ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்று சொன்னால் அது திமுக அரசாங்கம் தான். மாண்புமிகு அம்மா இருக்கின்ற போது இப்போது அமைச்சராக இருக்கும் திமுககாரர் பல பேர் இருக்காங்க. முன்னாள் திமுக அமைச்சர் சுமார் 13 பேருக்கு மேல் ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இன்று 10 – 13 ஆண்டு காலம் வாய்தா வாங்கி விட்டு வந்து விட்டார்கள்.

நீதிமன்றத்தில் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவை சேர்ந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு,  அந்த வழக்குகளை அவசர அவசரமாக விசாரித்து இன்றைக்கு மூன்று நான்கு அமைச்சர் விடுதலையாகி இருக்கின்றனர். நாங்க சும்மா விட மாட்டோம் .

உச்ச நீதிமன்றம் வரை சென்று உங்களுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். அது மட்டும் இல்லை,  தமிழ்நாட்டை சேர்ந்த உயர் கல்வித் துறை அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விடுதலை பெற்றார்.ஆனால் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இதிலே நீதி வழங்கவில்லை, சந்தேகம் இருக்கிறது என்று மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பை கொடுத்திருக்கின்றது என தெரிவித்தார்.