தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டு மதிப்பை பத்திரப்பதிவுத்துறை மூலமாக அரசு மாற்றியமைத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளது.

அதாவது சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு 800 ரூபாயாகவும் ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு 700 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.