லியோ திரைப்படத்தின் வெற்றிக்காக  படக்குழு திருப்பதிக்கு சாமி தரிசனம் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். 

லியோ  திரைப்படம் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான அப்டேட்கள்  படத்தின் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வருகிறதோ ?  இல்லையோ ? படத்தின் ரைட்டர் ரத்ன குமார் சில அப்டேட்களை லியோவை குறிப்பிடும் வகையில் சில பதிவுகளை தனது சமூக வலைதள கணக்குகளில்  பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில்,

  லியோ படக்குழு தற்போது திருப்பதியில் சாமி தரிசனம் செல்ல சென்றிருக்கின்றனர்.  கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்ட அவர்களை சுற்றி ஏராளமான பாதுகாவலர்கள் கையில்  குச்சியுடன் நடந்து செல்வது போன்ற வீடியோ தொகுப்பை  லியோ படத்தின் டயலாக் ரைட்டர் ரத்தினகுமார் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.  அதில்,  அனைவரும் கோவிந்தா கோவிந்தா என கூறி  கொண்டே நடந்து செல்லும் போது  இடையே கழுதை  புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்,

இத்தனை பாதுகாப்பு எங்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக ரத்னகுமார்  தெரிவித்திருப்பார்.  ஏற்கனவே திருப்பதியில் வனவிலங்குகளின்  நடமாட்டத்தால் பக்தர்கள் காணாமல் செல்வதும்,  தாக்கப்படுவதும் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன.  அதை குறிப்பிடும் விதமாகவும்,  லியோ படத்தில்  ஹைனா  காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.  அதையும் குறிப்பிடும் விதமாக இந்த பதிவை அவர் பதிவேற்றியுள்ளார்.  இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by Rathna Kumar (@mr.rathna)