வேறு எந்த படத்திலும் இல்லாத விஜய் அவர்களை இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என படத்தின் டயலாக் ரைட்டர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

  அக்டோபர் 19-ல் வெளியாக  உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  ஒருபுறம் படக்குழு  படத்திற்கான ப்ரோமோஷன்  பணிகளில் ஈடுபட்டு வர மறுபுறம் படத்தின் இயக்குனர் மற்றும் டயலாக் ரைட்டர்ஸ் லியோ குறித்த சுவாரசியமான தகவல்களை நேர்காணலில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,  லியோ படத்தின் டயலாக் ரைட்டர் ரத்னகுமார் சமீபத்திய நேர்காணலில் பேசியதாவது, 

ஒரு சில படங்கள் அந்த படத்தில் நடிக்கக்கூடிய கதாநாயகர்களின் ரசிகர்களுக்கு பிடிக்கும்.  பிற ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகும்.  ஆனால்,  லியோ விஜய் அவர்களை வெறுக்கும் நபர்களுக்கு கூட பிடிக்கும் அளவுக்கு இருக்கும்.  லியோ திரைப்படம் போல் இதற்கு முன்பாக தளபதி விஜய் அவர்கள் வேறு எந்த படத்திலும் இப்படி  நடித்ததில்லை.  அவரது முந்தைய படங்களுக்கான சாயல்  இந்த படத்தில் துளியளவு கூட இல்லை. 

ஆனால் நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.  இனி அவர் நடிக்கக்கூடிய அடுத்தடுத்த படங்களில் இந்தப் படத்தில் இருக்கும் விஜய் அவர்களின் சாயல் கண்டிப்பாக இருக்கும்.  இந்தப் படத்திற்கான கதை விக்ரம் படத்திற்கு முன்பாகவே எழுதப்பட்டு விட்டது.  எனவே இதற்கென தனியாக குறிப்பாக lcu -க்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என எந்த ஒரு மெனக்கிடலும்  இல்லை.  எந்த ஒரு ஐடியாவையும் லோகேஷ் இதற்காக மாற்றவில்லை என தெரிவித்திருந்தார். இவர் பேசியது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரெட்டிப்பாக்கி  உள்ளது.