OCT 16ல் அனிருத் பிறந்தநாளன்று லியோ படத்திற்கான சிறப்பான அப்டேட் படக்குழு தரப்பிலிருந்து வழங்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

லியோ  திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரங்கள் இருக்கும் நிலையில்,  படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக நேர்காணலில் கலந்து கொண்டு  ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இனி வரக்கூடிய வாரங்களில் படத்திற்கான அப்டேட்கள் ஏராளம் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், 

இன்னும் ஒரு சில பாடல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போல்,  அக்டோபர் 16ம்  தேதி அனிருத் அவர்களின் பிறந்தநாள் வருகிறது.  அதை ஒட்டி படகு குழுவினர் பயங்கரமான BGM  ஏதேனும் ஒன்றை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அல்லது அவரது பிறந்தநாள் அன்று ஹைதராபாத்தில் லியோ திரைப்படத்திற்கான பிரீ ரிலீஸ் நிகழ்வு  நடத்தப்படலாம். அதில் இசையமைப்பாளர் அனிருத் மக்கள் முன்பு பாடலை பாடி அசத்துவார் என கூறப்படுகிறது.  படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் முதல் நாள் கலெக்சன் ரூபாய் 25 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.