சாலை விதிகளைப் பின்பற்றாததால் ஏற்படும் விபத்துகள் நமது அன்றாட வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி இதற்கு ஒரு துயரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. காணொளியில், ஒரு கார் இடதுபுறம் திரும்பி முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது, பின்னால் இருந்து வந்த இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது.
இந்த விபத்தையடுத்து காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கதவைத் திறந்து இறங்க முயலும்போது, வலதுபுறமாக வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் காரின் கதவில் மோதி மேலும் ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்தக் காணொளி, பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் வாகனம் ஓட்டும்போது இருபுறமும் கவனமாகப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
View this post on Instagram
