புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் இடம்பெற்றிருந்த தொலைபேசி எண்ணிற்கு ராஜேஷ் அழைத்துள்ளார். அந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ராஜேஷ்யிடம் உள்ள பழைய காலத்து ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். பின்னர் பேசிய அவர் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் பழைய காலத்து நோட்டுகள் தான்.
எனவே இதற்கு 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ராஜேஷை நம்ப வைத்துள்ளார். மேலும் 4 லட்சத்துக்கு ஜி.எஸ்.டி கொடுக்க வேண்டும் எனக் கூறி ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து இதில் 35 ஆயிரம் முன்பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜேஷ் அந்த வங்கி கணக்குக்கு 35 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன் பின் ராஜேஷுக்கு எந்த ஒரு அழைப்பும் அந்த மர்ம நபரிடமிருந்து வரவில்லை. பின்னர் தான் ஏமாந்ததை உணர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சைபர் கிரைமில் புகாரை அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.