தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்கசிவந்த வானம், வட சென்னை, எந்திரன் 2.0, டான் உட்பட பல்வேறு படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் மணிரத்னம், இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 24-வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. அதாவது, அஜித்தின் ஏகே-62 (அ) ரஜினியின் 171-வது படம் குறித்த அறிவிப்பை இந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.